கரணம் தப்பினால் மரணம்: தலைதெறிக்க ஒடி பயத்தை ஏற்படுத்திய குரங்கு
கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழியை உண்மையாக்கும் வகையில் குரங்கு ஒன்று ஆபத்தான பாதையில் இரண்டு கால்களை வைத்து மின்னல் வேகத்தில் ஒடும் காட்சி வைரலாகி வருகின்றது.
மனிதன் ஓடுவது போல் குரங்கு இரண்டு கால்களிலும் ஓடுவதை பார்க்கவே பயமாக இருக்கிறது.
மலைப்பாதையில் தடுப்பு சுவரில் வேகமாக ஓடும் குரங்கு பி.டி. உஷாவைப் போல வேகமாக ஓடுகிறது. இந்த குரங்கு சிறு தவறு செய்திருந்தாலும், ஒரு அடி தவறியிருந்தாலும் கூட, மலையில் இருந்து நேராக பள்ளத்தில் விழுந்திருக்கும் என்பதால் வீடியோ அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் மக்கள் வேடிக்கையாக ரசித்துப் பார்க்கின்றனர். குரங்கு பள்ளத்தில் விழாது என்றும், விழுந்தாலும் குதித்து மரத்தில் ஏறியிருக்கும் என்றும் பல்வேறுவிதமான கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.
