உலகநாடுகளே அச்சத்தில்...வேகமாக பரவிவரும் குரங்கம்மை!
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் ‘மங்கிபாஸ்’ என்று அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது.
இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மையை விட அளவில் பெரிய கொப்பளங்கள் உடல் முழுவதும் அதிகமாக ஏற்படும்.
இந்த நிலையில் இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர கண்கணிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.