திடீரென குட்டியுடன் என்ட்ரி கொடுத்த குரங்கு... அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்
திருமண தம்பதியருக்கு போட்டோஷுட் எடுத்து கொண்டிருந்த வேளையில் குரங்கு ஒன்று என்ட்ரி கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பூங்கா ஒன்றில் மணமகன் தன்னுடைய துணையருடன் காதலுடன் சுழன்றுகொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக அதனை பார்த்து பரவசமடைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குட்டியை சுமந்தபடி அவர்களின் அருகில் வந்தது.
இதனால் பதறிப்போன மணப்பெண் தள்ளிப்போக, மணமகனின் இடுப்பில் குட்டியுடன் ஏறிய குரங்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் இருவருக்கும் செல்லமானது. பின்னர் குரங்கு அங்கிருந்து சென்றுவிட இருவரும் மீண்டும் போட்டோ ஷூட் நடத்தினர்.
வைரல் வீடியோ
இந்த வீடியோவை வீடியோகிராபர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது, “எங்களால் இதனை நம்பமுடியவில்லை. குரங்கு தனது குட்டியுடன் போட்டோ ஷீட்டில் கலந்துகொண்டதை நாங்கள் சிறந்த தருணமாக கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
இந்த வைரல் 2.9 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளதோடு, நூற்றுக்கணக்கான வரவேற்பு கமெண்டுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.