ஒரு நண்பனை இப்படியா கடுப்பேற்றுவது? பாவப்பட்ட குரங்கின் பரிதாப ரியாக்ஷன்! சிரிப்பை அடக்கமாட்டீங்க
குரங்கு ஒன்று தனது கையில் வைத்திருந்த ஆப்பிள் பழத்தினை சக குரங்கு ஒன்றினை பார்க்க வைத்து சாப்பிடும் காடசி வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குளின் சேட்டை என்பது பார்ப்பதற்கு சற்று சுவாரசியமாகவே இருக்கும். அதுவும் குரங்குகளின் குறும்புத்தனத்திற்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இங்கு குரங்கு ஒன்று கையில் ஒரு ஆப்பிளுடன் தனது சக குரங்கின் அருகில் வந்து அமர்வதை காண முடிகின்றது. முதலில் ஆப்பிளை காட்டி அந்த குரங்கு மற்றொரு குரங்கை சீண்டுகிறது.
பின்னர் அதை சாப்பிடத் தொடங்குகிறது. மற்ற குரங்கு ஆப்பிளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறது, ஆனால் முதல் குரங்கு அதற்கு ஆப்பிளை கொடுக்கவில்லை.
இரண்டாவது குரங்கின் பார்வை ஆப்பிளை விட்டு மற்ற பக்கம் சென்றவுடன் முதல் குரங்கு மீண்டும் அதன் முகத்தினை திருப்பி முன்னால் ஆப்பிளை காட்டி அதை சாப்பிட்டு முடித்துவிட்டது.
இதனை அவதானித்த நெட்டிசன்கள் ஒரு நண்பனை இப்படியாக கடுப்பேற்றுவது என்று கேள்வி எழுப்பி வந்தாலும், வேறு சிலர் முதல் குரங்கு, இரண்டாம் குரங்குக்கு ஆப்பிளை அளிக்க மிகவும் முயற்சி செய்வது போலவும், அதற்காக ஆப்பிளை காட்டி காட்டி அதை சாப்பிட வைக்க முயற்சிப்பது போலவும் தெரிவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த காணொளி இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகி வருகின்றது.