Tamizha Tamizha: நள்ளிரவில் மனைவி செய்யும் அநியாயம்... விழி பிதுங்கும் கணவர்கள்
தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஆசையாய் செலவு செய்யும் மனைவிகள் மற்றும் அச்சப்படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
இன்று பல தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில், தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏனெனில் இதில் விவாதிக்கப்படும் தலைப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப் போவதாக இருந்து வருகின்றது.
அதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்நிகழ்ச்சியினை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் ஆசையாய் செலவு செய்யும் மனைவிகள் மற்றும் அச்சப்படும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
இதில் பெண் ஒருவர் கணவர் தூங்கிய பின்பு நள்ளிரவில் பொருட்களை ஆர்டர் செய்வதாகவும், காலையில் கணவர் அதனை அறிந்ததும் பயமாக இருப்பதாக கூறுகின்றனர்.
மற்றொருவர் தனது மனைவி ஹெல்மெட் கலரில் பைக் இல்லை என்பதால் பைக்கையே மாற்றியுள்ளதாக அரங்கத்தில் புலம்பி தள்ளுகின்றார்.
ஆனால் குறித்த பெண் ஆசிரியர் என்று கூறியதால் தொகுப்பாளர் கோபத்தில் கொந்தளித்துள்ளார். இப்படியும் பெண்கள் இருக்கின்றார்களா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |