காசு அறவே தேவையில்லை... இந்த ஒரு பொருளை வைத்தே சக்கரை நோயை விரட்டியடிக்கலாம்! எப்படி தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளில் 1.6 மில்லியன் இறப்புகளுக்கு நேரடி காரணம் நீரிழிவு நோய் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு, உலகின் பெரிய கொலையாளி என்ற பட்டியலில் ஏழாவது இடத்தை நீரிழிவு நோய் பிடிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நீரிழிவு நோய் ஒரு நாட்பட்ட மற்றும் வளர்சிதை மாற்ற நோய். இரத்தத்தில் க்ளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகிறது.
இதற்கான சரியான சிகிச்சை எடுக்காமல் விடும்போது இதயம், இரத்தக் குழாய், கண்கள், சிறுநீரகம் மற்றும் நரம்புகள் பாதிக்கப்படுகிறது. நீரிழிவு பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது மற்றும் நோய் கண்டறிதல் தாமதமாக உண்டாகும் போது அதனை நிர்வகிக்க முடியாத நிலைமை உண்டாகிறது. நீரிழவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகுந்த கவனம் கொள்வது அவசியம்.
சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள், ட்ரான்ஸ் கொழுப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உயர் நார்ச்சத்து உணவு, கார்போ மற்றும் புரத உணவுகள் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுகளாகும். நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் பல உணவுகள் மற்றும் மூலிகைகள் உதவியாக உள்ளன. உதாரணமாக வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் வேப்பிலை என்னும் மூலிகை இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய முழுவதும் வளரும் ஒரு மூலிகை வேப்பிலை. வேப்பமரம் 30-50 அடி உயரம் வளரக் கூடியது. இதன் ஒவ்வொரு பாகமும் வலி நிவாரண மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளது.
காலகாலமாக இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் வேப்பிலை ஒரு முக்கிய இடத்தை பிடிக்கிறது. வேப்பமரத்தில் எல்லா பகுதிகளும் - இலைகள், பூ, விதைகள், பழங்கள், வேர் மற்றும் கிளைகள் பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது. வீக்கம், தொற்று, காய்ச்சல், சரும நோய், மற்றும் பல் பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வைத் தருகிறது.
ஆசாதிரச்தா இண்டிகா என்பது இதன் தாவர பெயராகும். இதில் அமைந்திருக்கும் சில கூறுகள் இரத்த சக்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. உடற்கூற்றியல் மற்றும் மருந்தியல் இந்திய இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வேம்பு எந்த ஒரு நோயைத் தடுப்பதில் அல்லது தாமதப்படுத்துவதில் உதவுகிறது. இன - மருத்துவம் பற்றிய பத்திரிகை ஆய்வுகள், வேப்பிலை தூள், நீரிழிவு அறிகுறிகளை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி தீர்க்கிறது? வேம்பு, இரத்த சக்கரை அளவைக் குறைப்பதாக மேலும் சில ஆய்வுகள் கூறுவதற்கான தக்க சான்றுகள் தேவைப்படுகிறது. ஆனாலும் சில நிபுணர்கள் இந்த அற்புத மூலிகையை ஆதரித்து வருகின்றனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் வேப்பிலை சாறு பருகுவதால் அல்லது ஒரு கை நிறைய வேப்பிலையை எடுத்து மென்று சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் இதனை அதிகம் சாப்பிடக் கூடாது. மேலும் இதனை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
வேப்பிலை அதிகம் உட்கொள்வதால் ரத்த சர்க்கரை குறைபாடு என்னும் ஹைபோ க்ளைகமிக் தன்மை உண்டாகலாம்.