பணம் பாதாளம் வரை பாயும்...
பணம் இந்த வார்த்தைதான் முழு உலகையே ஆட்டிப் படைக்கின்றது. பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று யாரும் வாய் வார்த்தையால் மாத்திரம் கூறவில்லை.
உண்மையிலேயே தற்போது பணம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. பணம் இருந்தால்தான் மனிதனுக்கு மதிப்பு எனுமளவுக்கு அனைத்தும் மாறிவிட்டது.
ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரையில் பணம் அவனது வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றது.
image - cnbc
பணம் இல்லையென்றால் நம்மால் எதையுமே செய்ய இயலாது. பணம் இல்லையென்ற காரணத்தால் எத்தனை எத்தனையோ பேர் தங்களது ஆசை, கனவு, இலட்சியம் அனைத்தையும் உதறித் தள்ளிவிடுகின்றனர்.
ஏனென்றால் சில கனவுகளை நனவாக்கக்கூட பணம் தேவைப்படுகின்றது. பணக்காரன் என்றால், அவன் விரும்பிய உணவு, உடை,பொருள் என்று அனைத்தையும் அனுபவித்துவிடுவான்.
ஆனால், ஏழையாக பிறந்த ஒருவனுக்கு என்ன இருக்கிறது? அவன் இறுதிவரை பணம் இல்லாத காரணத்தால் தான் விரும்பிய எதையுமே செய்ய முடியாமல் மனதளவில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றான்.
image - ap news
என்னதான் பணம் காகிதங்களாக இருந்தாலும்கூட அது மனிதர்களை ரொம்பவே ஆட்டிப்படைக்கின்றது. மனிதன் எதற்காக ஓடுகின்றான். பணம் சம்பாதிக்கத்தான். ஏனென்றால் பணம் இல்லையென்றால் தற்போது பிணத்துக்குக் கூட யாரும் மதிப்பிடுவதல்லை.
அதுவே உண்மை. ஒருவனுக்கு மதிப்பு கொடுப்பதா? இல்லையா? என்பதை அவனிடம் உள்ள பணமே முடிவு செய்கிறது. என்னதான் வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்றாலும் பணத்தால், அன்பு, பாசம்,காதல் போன்ற உணர்ச்சிகளை நிச்சயம் வாங்க முடியாது.
திருமணம், வளைகாப்பு என எந்த ஒரு விழாவை எடுத்துக்கொண்டாலும் அங்கே பணம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
image - bussinessday ng
பணத்துக்காக நம்மைச் சுற்றி என்னவெல்லாமோ அநியாயம் நடக்கின்றது. அதை தினம் தினம் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
பல குடும்பங்களின் பிரிவுக்கு சில நேரங்களில் பணமே முதன்மை காரணியாக இருக்கின்றது. ஏனென்றால் எவ்வளவு ஒற்றுமையானவர்களாக இருந்தாலும் பணம் என்ற ஒற்றைத்தாள் அவர்களை பிரித்துவிடும்.
image - bloomberg.com
பணம் பற்றிய சில கவிதை வரிகள்...
- பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்.
- பெண்ணும் பணமும் நினைத்தால் எந்த மாதிரியான உறவுகளையும் உருக்குலையச் செய்ய முடியும்.
- பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகீழாக தள்ளிவிடும். பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால், அதை யாரும் மறுப்பதில்லை.
- கீற்று இருக்கும்வரை ஓலைக்கு மதிப்பு பணம் இருக்கும்வரை மனிதனுக்கு மதிப்பு.
- பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும். பணம் இல்லையென்றால் சொந்தக்காரன் சொல்லும் கொல்லும்.
- பணம் உள்ளவன் சொல்லை ஆராய யோசிக்கும். பணம் இல்லாதவன் சொல்லை கேட்கவே யோசிக்கும் சமூகம் இது.
- பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல, ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூன் உடைப்பது போல.
- இந்த உலகம் உன்னை தூக்கி வைத்து ஆடுவதையும் தூக்கி எறிந்து வீசுவதையும் நிர்ணயிப்பது உன் குணமல்ல நீ வைத்திருக்கும் பணம்.
- பணம் இன்றி மனிதனால் வாழ முடிகின்றது. ஆனால், மனிதர்களுடன் தான் வாழ முடியவில்லை.
- பலபேரின் எச்சில்பட்டு, பல கை மாறி வந்தாலும் தீட்டில்லாத ஒன்று...அது இந்த பணம் மட்டுமே!
- பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விட்டுவிடாதே!
- பணம் உங்களுக்கு மகிழ்ச்சியை வாங்கித் தராது. ஆனால், பணமின்மை உங்களுக்குத் துன்பத்தைத் தரும்.
- பணத்தை வைத்திருப்பவனுக்கு பயம். அது இல்லாதவனுக்கு கவலை!
-
பணம் உங்களிடம் இருந்தால், வழிப்போக்கனும் உங்களுக்கு சொந்தம். அது உங்களிடத்தில் இல்லையெனில் சொந்தத்திற்கும் நீங்கள் வழிப்போக்கன்.