மனிதர்களின் தரத்தை நிர்ணயிக்கும் பணத்திற்கு எத்தனை பெயர்கள் தெரியுமா? இதோ முழு தொகுப்பு
money name
human life money name
verity of money name
By Manchu
பாமர மக்களிடம் இருந்து பணக்காரர்கள் வரை அனைவரிடமும் சென்று கைமாறி வரும் பணத்திற்கு எவ்வளவு பெயர் இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா? இடத்திற்கு ஏற்ப மாறுபடும் பணத்தின் பெயர்களின் தொகுப்பு இதோ...
அர்ச்சகருக்கு கொடுத்தால் தட்சணை
கோயில் உண்டியலில் செலுத்தினால் காணிக்கை
யாசிப்பவருக்குக் கொடுத்தால் பிச்சை
கல்வி கூடங்களில் கட்டணம்
திருமணத்தில் வரதட்சணை
திருமண முறிவில் ஜீவனாம்சம்
விபத்துகளில் இறந்தால் நஷ்டஈடு
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால் தர்மம்
நாமாக விரும்பி ஏழைகளுக்கு கொடுத்தால் தானம்
திருமண வீடுகளில் பரிசாக மொய்
திருப்பித்தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது கடன்
திருப்பிதர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது அன்பளிப்பு
விரும்பிக் கொடுத்தால் நன்கொடை
நீதிமன்றத்தில் செலுத்தினால் அபராதம்
அரசுக்குச் செலுத்தினால் வரி
அரசு பொது தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது நிதி
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது சம்பளம்
தினமும் கிடைப்பது கூலி
பணி ஓய்வு பெற்றால் கிடைப்பது ஓய்வூதியம்
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் லஞ்சம்
கடன் வாங்கினால் அத்தொகைக்கு அசல்
வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் போது வட்டி
தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு முதலீடு
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு இலாபம்
குருவிற்குக் கொடுக்கும்போது குருதட்சணை
ஹோட்டலில் நல்குவது டிப்ஸ்
இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்த பணத்திற்கு மாற்றாக
வேறொன்றும் இப்புவியில் இல்லை என்பது நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்கும். அதே போன்ற மனிதர்களின் தரத்தினை நிர்ணயிப்பதும் இந்த பணமே என்பதை யாரும் அசைக்க முடியாத உண்மையாகும்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US