பணம் அதிகமாக வரும் நேரம் எது? பரிகாரங்கள் உண்டா?
தற்போது அனைவருக்குமே பணம் ஒரு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அதிலும் கடன் வாங்கிவிட்டால் சொல்லவே தேவையில்லை. சில நேரங்களில் அதற்கு ராசி, நட்சத்திரம் என்பன கூட காரணமாக இருக்கலாம். இனி அதுகுறித்து ஜோதிடர் கூறும் விளக்கங்களைப் பார்ப்போம்.
பொதுவாக எந்த ராசிக்காரரிடம் கடன் வாங்கினால் கடன் பிரச்சினை இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது? ஒரு சிலர் செல்வச் செழிப்பாக இருந்தாலும் இன்னும் சிலர் வறுமையில் இருப்பர். இன்னும் சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களால் காசைப் பார்க்க முடியாது..எந்த ராசியில் இருப்பவர்களுக்கு செல்வம் அதிகமாக கிடைக்கும்?
பொதுவாக ஒரு ராசியையோ அல்லது நட்சத்திரத்தையோ வைத்து, இவர்களுக்கு பணம் சேரும் இவர்களுக்கு சேராது என கூறமுடியாது. ஜாதகத்தில் நிறை அமைப்புக்கள் உள்ளன.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்திலிருந்து ஆறாமிடம் கடன் வரக்கூடிய ஸ்தானம். எட்டாமிடமானது ஆறாமிடத்துடைய விரிவாக்கம். கடன், சத்ரு,ரோகம் என்பார்கள். அதில் கடன் என்பது நாம் வாங்கும் கடனாகும், சத்ரு எதிரி. ரோகம் என்பது நோயாகும். இதன் விரிவாக்கம் தான் எட்டாமிடம். அதேபோல் 12ஆம் இடம் விரயம்.
ஒரு லக்கினத்துக்கு 6ஆம் அதிபதியும் 6ஆம் இடத்து கிரகமும் 8ஆம் இடத்து கிரகமும் 12ஆம் இடத்து கிரகமும் சேர்ந்து 2 ஆம் இடத்தில் போய் உட்கார்ந்தால் ஒரு சிறிய உதாரணத்துக்கு, 2 ஆம் இடம் என்பது நேரடியாக வருவாய் வரக்கூடிய இடம். 5 ஆம் இடம் என்பது கலை, பொழுதுபோக்கின் மூலமாக பணம் சம்பாதிப்பது.
8ஆம் இடம் என்பது திடீர் அதிர்ஷ்டம். அதேபோல் 11 ஆம் இடம் என்பது இலாப ஸ்தானம். இதில் குறிப்பாக 3 இடங்கள்தான் நமக்கு பணம் வரக்கூடிய இடங்கள். 2ஆம் இடம், 8ஆம் இடம், 11ஆம் இடத்துக்குரிய கிரகங்கள் நல்ல இடத்தில் அமர வேண்டும், கெட்ட இடத்தில் அமர்ந்துவிடக் கூடாது என்று பொதுவாக கூறுவார்கள்.
அடுத்ததாக யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்றால், 6ஆம் இடத்துக்குரிய கிரகம், 8ஆம் இடத்துக்குரிய கிரகம், 12 ஆம் இடத்துக்குரிய கிரகம் இந்த மூன்று கிரகங்களும் சேர்ந்து 2 ஆம் இடத்தில் ஒருவனுக்கு போய் உட்கார்ந்தால், அவன் பிறப்பிலேயே சக்கரவர்த்தியாக இருந்தாலும் அவனது கடன் எப்படி இருக்குமெனில் மொத்த சொத்தையும் விற்று தீர்த்தால்கூட கடனை அடைக்க முடியாத ஒரு சூழல் வருமாம்.
அதாவது ஜாதகம் வேறு. ராசி வேறு. நமது ராசி என்னவோ, அதிலிருந்து 3ஆம் இடத்துக்கு சூரியன் வரும்பொழுது பணம் வரும் என்கிறார்கள். 11 ஆம் இடத்தில் சூரியன் இருப்பதும் மிகப்பெரிய உயர்ந்த அமைப்பு.
11 ஆம் இடத்தில் சூரியன் இருக்கக்கூடிய ஜாதகக்காரர் கையில் பணம் வாங்கினால் வாழ்க்கை நன்றாக இருக்கும். நமக்கு பணம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்.
அதேபோல் குரு பெரிய பணத்துக்கு உரியவர். சுக்கிரன் சிறு சிறு பணத்துக்கு உரியவர். சுக்கிரன் ஜாதகத்தில் 6,8,12 இல் இருந்தால் மிகவும் விசேடம் என்கிறார்கள். 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்கக்கூடியவர்களிடம் பணம் வாங்கினால் நல்லது. ஒரு ஜாதகத்தில் 11 ஆம் இடத்து சூரியன் 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
மிகப்பெரிய ஒரு தொழில் தொடங்குவதற்கான ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?
ஜாதகத்தில் 10 ஆம் இடத்தை தொழிலுக்கு உரிய இடமாக கூறுகிறார்கள். அதேபோல் 3 ஆம் இடம் என்பது முயற்சியைக் குறிக்கும். 3ஆம் இடம் வலுவாக இருந்தால், இவர்கள் சொந்தத் தொழில் செய்யலாமா? அல்லது வேலைக்குச் செல்ல வேண்டுமா என்பது ஜாதகத்தின் அமைப்பு.
3,10 ஆகிய இடங்களையும் அவர்களுக்கு வருவாய் வரக்கூடிய ஸ்தானங்களையும் பார்க்க வேண்டும். வருவாய் தடையில்லாமல் வருமா? எந்த நேரத்தில் தொழில் தொடங்கலாம் என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்துதான் முடிவு செய்ய முடியும்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்.