மறைந்த பவதாரிணி பெயரில் பண மோசடி - அதிர்ச்சி தகவலை பகிர்ந்த கங்கை அமரன்
இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான மறைந்த பவதாரிணியின் பெயரில் பண மோசடி ஏற்பட்டுள்ளதாக பிரபல பாடகர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
பவதாரிணி பெயரில் பண மோசடி
தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தேர்தலில் தலைவராக சபேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிரபல பாடகரான கங்கை அமரன் முந்தைய தலைவரான தீனா குறித்து பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அது தற்போது இசைத்துறையில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சங்கத்தின் விதிகளை மீறி தீனா நடந்துக்கொண்டார். பாஜகவில் உறுப்பினராக இருக்கும் அவர், சங்கத்திற்கான வாட்ஸ் ஆப் குழுமத்தில் கட்சி சார்ந்த விடயங்களை பகிர்வார்.
அதற்கு பலரும் எதிர்பு தெரிவித்திருந்தார்கள். சங்கத்துக்கான எண்ணை பயன்படுத்தாமல், அவரது சொந்த தொலைபேசி எண்ணை சங்கத்திற்காக பயன்படுத்தியமைக்கும் எதிர்ப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் நடிகர் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் வழங்கிய நிதியை தினா கையாடல் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
இவை ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்காமல் தலைவர் பதவியில் இருந்தார். தேவாவின் சகோதரர்கள் மட்டுமே தினாவின் நடவடிக்கைகளை எதிர்த்தார்கள்.
“ஒரு ஆளுக்கு 4 வருஷம் தான் பதவி, நீ செய்யிறது சரியில்லையா..” என இளையராஜாவும் தினாவை கண்டித்த ஒரு நிகழ்வும் நிகழ்ந்துள்ளது.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில், எங்கள் வீட்டில் துக்க நிகழ்வு நிகழ்ந்துள்ளது. எனவே இளையராஜாவால் வர முடியாது. எனவே நான் மட்டும் வந்திருக்கிறேன்.
இந்த யூனியனின் விதியின் படி ஒருவருக்கு 2 வருட பதவி காலம் தான் இருக்கும். அதை மேலும் 2 இரண்டு வருடம் நீட்டித்துக் கொள்ளலாம்.
ஆனால் 4 முறை தலைவராக இருந்த தினா அவரது அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்த 4 வருடத்திற்கும் அவரே தலைவராக இருக்க வேண்டும் என அடம்பிடிக்கிறார்.
இவர் பதிவியில் இருந்த போது நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி பண்ணுவதாக அவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள்.
பணம் கோருவதற்காக கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில் மறைந்த பவதாரிணியின் கையெழுத்து போட்டுக் கூட பணம் எடுத்துள்ளார்கள்.
சுமார் 80 லட்சத்துக்கும் மேலாக இவர் எடுத்துள்ளார். அந்த கணக்கெல்லாம் எங்கு தெரிந்துவிடுமோ என்பதற்காக மீண்டும் தலைவராக வர தினா முயற்சிக்கிறார் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தினாவின் தோல்வியால் ஒட்டு மொத்த சங்கமும் மகிழ்ச்சியில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |