உங்க வீட்டுல மணி பிளாண்ட் வைத்துள்ளீர்களா? அப்போ இந்த தவறுகளை செய்யவே கூடாதாம்
money plant
money plant in house
By Manchu
அதிர்ஷ்டத்திற்கு முக்கிய காரணமாக அமைவதாக நம்ப்பப்டும் மணி பிளாண்ட் பெரும்பாலான வீடுகளில் மக்கள் வளர்த்து வருகின்றனர்.
இவ்வாறு நாம் வளர்க்கும் மணி பிளாண்ட் வாஸ்து சாஸ்திரபடி சில விடயங்களை நிச்சயம் கவனிக்க வேண்டுமாம்.
- மணி பிளாண்டை கிழக்கு-மேற்கு திசையில் வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்தால் அதிகமாக சிக்கல் ஏற்படும். இதனால் தென்கிழக்கு திசையிலேயே இதனை வைக்க வேண்டும்.
- மணி பிளாண்டின் இலைகள் அல்லது கிளைகள் எதும் காய்ந்துவிட்டால் அதனை உடனடியாக வெட்டி எடுத்துவிட வேண்டும். இந்த செடியினை வளர்க்கும் நீங்கள் இந்த செயலை செய்யாமல் உங்களது நண்பரைக் கொண்டு இதனை வெட்டி எடுக்க வேண்டும். செடியை வளர்க்கும் நபரே அதன் இலைகள் மற்றும் கிளைகளை வெட்டக்கூடாதாம்.
- மணி பிளாண்டிற்கு எப்போதும் வடிகட்டிய நீரை ஊற்றவும். இந்த செடிக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் ஊற்றும்போது இலைகளில் சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
- மணி பிளாடிற்கு அதிக தண்ணீர் சேர்த்தால், அதன் இலைகளால் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக அதன் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழே விழ ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் மணி பிளாண்டிற்கு உரமிடக்கூடாது.
- வீட்டிற்குள் ஒரு மணி பிளாண்டை வைக்கும்போது, தொட்டியின் அளவு கொஞ்சம் பெரியதாக இருக்க வேண்டும். காரணம் இந்த செடி வேகமாக வளர்வதால், வேர்கள் விரிவடைய இடம் இல்லாமல் இருந்தால் செடியின் வளர்ச்சி பாதிக்கும்.
- மணி பிளாண்டை எப்போதும், வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் வருகிறது. மேலும் செடியை வீட்டிற்குள் யாரும் நேரடியாக பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும்.
- மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைத்தால், அதன் நேர்மறையான விளைவு முடிவடைந்து, நல்ல விளைவுகள் ஏற்படுவதற்கு பதிலாக சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கும்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US