இளைஞரின் உயிரைப் பறித்த Momos... அதிர்ச்சி காரணம் அம்பலம்
பீகாரில் மோமோஸ் சாப்பிடும் போட்டியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை காவுவாங்கிய Momos
பீகார் மாநிலத்திலத்தில் சிஹோர்வா கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார்(25). இவர் மொபைல் பழுது பார்க்கும் கடை நடத்திவந்த நிலையில், சிவான் மாவட்டம் கோபல்கஞ்ச் அருகே சாலையில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகின்றது.
தகவலறிந்த பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், தனது மகனுக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ளனர் என்று விபினின் தந்தை விஷ்னு குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது தனது மகனை வேண்டுமென்றே மோமோஸ் சாப்பிடும் சவாலில் ஈடுபடுத்தி, அதில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளதாக தந்தை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பந்தயத்தில் 150 மோமோஸ்களை சாப்பிட்டதால் விபின் உடல்நலம் மோசமாகி உயிரிழந்ததாகவும், மருத்துவமனை கொண்டு சென்றும் பலனளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே உண்மை காரணம் தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |