அந்தரங்க பகுதியில் தீக்காயத்துடன் 6 வயது குழந்தை: மருத்துவரால் அவிழ்ந்த தாயின் சுயரூபம்
ஆன்லைன் வகுப்பினைக் கவனிக்காத 6 வயது குழந்தையை தாய் ஒருவர் சூடு வைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 6 வயது குழந்தை ஒன்று உடம்பில் பல இடங்களில் தீக் காயங்களுடன் உறவினர்கள் மூலமாக கொண்டு வருப்பட்டுள்ளது.
குழந்தையின் காயத்தினை அவதானித்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விசாரணையில் குழந்தையின் தாய் கரண்டியை அடுப்பில் பழுக்க காயவைத்து, கால் மூட்டின் கீழ் பகுதியிலும், அந்தரங்க உறுப்பு, முகம் உட்பட பல இடங்களில் சூடு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தாயிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார், ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் இல்லாமல் இருந்ததாலும், பாடத்தினை கவனிக்காததாலும் இவ்வாறு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி குழந்தையையும், தாயையும் கணவர் தவிக்க விட்டு சென்றதும், பலமுறை குழந்தை தாய் இவ்வாறு தாக்கியதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
குழந்தையின் தாய்மாமா கொடுத்த புகாரின் அடிப்படையில் தாய் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில், குறித்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குழந்தைகள் நல அதிகாரிகள் தற்போது பராமரித்து வருகின்றனர்.