இன்றைய டீன் ஏஜ் மகள்களை அம்மாக்கள் சமாளிக்க என்ன செய்யவேண்டும்?
வளர்ந்து வரும் நவீன உலகில் டீன் ஏஜ் பெண்கள் அந்த வயதுக்குரிய துறுதுறுப்புமிக்கவர்களாக இருக்கிறார்கள். ஒரு 10 வயது பெண் 25 வயது பெண் போல் நடந்துகொள்வதும், எதிலும் சாதித்து விட முடியும் என்ற அதிக நம்பிக்கையும் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
அதோடு, பிடிவாதம், கோபம், மூர்க்கத்தனம் போன்றவைகளும் கலந்திருக்கிறது. அவர்களின் நலனுக்காக சொல்லப்படும் விஷயங்கள்கூட அவர்களின் கோபத்தைத் தூண்டுவது போன்று அமைந்து விடுகிறது.
மேலும், குடும்பத்தினர் அறிவுரை கூறினால் அதை காது கொடுத்து கேட்கும் மனநிலையிலும் அவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் மோதல்போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.
இதில் பெரிதும் பாதிக்கப்படுவது அம்மாக்கள் தான். டீன் ஏஜ் பெண்களை மென்மையான போக்குடன் அணுகி, பக்குவமாக அவர் களுக்கு வாழ்க்கையை புரியவைப்பது அம்மாக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.
இதற்கு காரணம் அந்தப்பருவத்தில் ஏற்படும் சில ஹார்மோன்களின் மாற்றம் தான். லேசான உரசல் கூட பெரிய பூகம்பமாக வெடித்துவிடும். விஷயமே இல்லாமல் பிரச்சினைகள் தோன்றும்.
பொதுவாக டீன் ஏஜ் பெண்கள் அனைவருமே, அம்மாக்கள் தங்களை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அம்மாக்கள் பாதுகாப்பு நலன்கருதி சில விஷயங்களை சொல்வார்கள்.
அதேவேளையில் மகள் அழகாகத் தோற்றமளித்தால் முதலில் மகிழ்ச்சி அடைவது அம்மாதான். நாலு பேர் மத்தியில் அரைகுறையாக இருந்தால் அதைப்பார்த்து வேதனைப்படுவதும் அம்மாதான்.
உடையில் எல்லையை கடைப்பிடிப்பது நாகரிகம். எல்லையை மீறுவது அநாகரிகம்.
டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு உதவுவதற்கு சில அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்கள், டீன் ஏஜ் பெண்களை சமாளிக்க பயிற்சி அளித்து, அம்மாக்களின் டென்ஷனைக் குறைக்கிறார்கள்.