இந்த இடத்தில் மச்சம் இருந்தால் பெரும் அதி்ர்ஷ்டமாம்! பலருக்கும் தெரியாத சுவாரசியம்
மச்சம் என்பது ஒரு சிறிய, கரும்பழுப்பு நிற புள்ளியாகும், இது நிறமி செல்களின் குழுவால் ஏற்படும் மச்சங்கள் பாதிப்பில்லாததாக கருதப்படுகிறது.
ஆனால், இந்த மச்சங்கள் உங்கள் ஆளுமையைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கும்.
உடம்பில் மச்சம் இருக்கும் இடத்திற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பினை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நெற்றி
நெற்றியில் மச்சம் இருப்பது செழிப்பின் அடையாளமாக கருதப்படுகின்றது. நெற்றியின் நடுவில் இருந்தால் ஞானத்தையும், இடது பக்கத்தில் இருந்தால் அதிர்ஷ்டத்தையும், வலது பக்கத்தில் இருந்தால் புகழும், வெற்றியும் கிடைக்குமாம்.

தாடை
தாடையில் மச்சம் இருப்பவர் பாசமும், அக்கறையும் கொண்டவராகவும், வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்துபவராகவும், சமநிலையானவராகவும் இருப்பார்.
கன்னம்
கன்னத்தில் மச்சம் உள்ள நபர்கள், குடும்பம், நண்பர்கள் என சுற்றி பாதுகாப்புடனே இருப்பார்களாம். கன்னத்தின் இடது புறம் இருந்தால் நேர்மையையும், வலது புறத்தில் இருந்தால் ராஜதந்திர ஆளுமையையும் குறைக்குமாம்.
உதடு
உதடுகளில் மச்சம் உள்ளவர்கள் தங்கள் சகாக்களை விட அதிக லட்சியம் கொண்டவர்கள். மேல் உதட்டின் இரு மூலைகளிலும் மச்சம் இருந்தால், நீங்கள் உணவுப் பிரியர் என்றும் கீழ் உதட்டின் கீழ் மச்சம் இருந்தால், நீங்கள் நடிப்பில் ஆர்வம் உள்ளவர் என்று அர்த்தம்.

மூக்கு
மூக்கில் மச்சம் உள்ளவர்கள் உயர்ந்த சுயமரியாதை உள்ளவராகவும், மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர் குறுகிய மனப்பான்மை உடையவராக இருப்பார்கள்.
மூக்கின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால், மிகவும் உணர்ச்சிவசப்படுபவராகவும், மூக்கின் இடது பக்கத்தில் மச்சம் இருந்தால், அது போராட்ட வாழ்வைக் குறிக்கிறது.
பாதம்
காலில் உள்ள மச்சம் பயணம் செய்வதைக் குறிப்பதுடன், உங்கள் நல்ல செயலுக்காக நீங்கள் அங்கீகரிக்கப்படுபவர்களாகவும் இருப்பீர்கள்.
வலது பாதத்தில் மச்சம் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கையையும், இடது காலில் உள்ள மச்சம் நிதிச் சிக்கல்கள் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் உள்ள சிக்கல்களை சந்திப்பதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டு நாட்களில் ஐந்து ராசிகளுக்கு அடிக்கும் பேரதிர்ஷ்டம்!