உடம்புல இந்த இடத்துல மச்சம் இருக்கா? யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் உங்ககிட்ட இருக்கும்!
மச்சம் என்பது சருமத்தில் மெலனின் தேக்கத்தின் ஒரு அடையாளமாகும்.
ஆனால் ஜோதிடத்தின் படி உடலில் உள்ள மச்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சிலர் இந்த மச்சங்கள் நமது கடந்தகால வாழ்க்கையின் முத்திரைகளாக நம்புகிறார்கள்.

உடலின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்கள் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் கைகளில் உள்ள மச்சங்கள் இன்னும் முக்கியமானவை. இப்போது கைகளில் உள்ள மச்சத்திற்கான ரகசியம் என்னவென்பதைக் காண்போம்.
கையில் மச்சம்
வலது கையில் மச்சம் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலி. இடது கையில் மச்சம் உள்ளவர்கள் தங்கள் தொழிலில் வெற்றியைக் காண்பார்கள். அதுவும் இடது கையில் மச்சம் உள்ள பெண் தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பாள்.

முழங்கை மச்சம்
பெண்ணுக்கு வலது முழங்கையில் மச்சம் இருந்தால், அப்பெண் நல்ல திறமை கொண்ட வலிமையான பெண்ணாக இருப்பார். இடது முழங்கையில் மச்சத்தைக் கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பர்.

மணிக்கட்டில் மச்சம்
வலது மணிக்கட்டில் மச்சம் உள்ள பெண் மிகவும் புத்திசாலியாக இருப்பார். மேலும் வலது மணிக்கட்டில் மச்சம் உள்ளவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயரும் மரியாதையும் கிடைக்கும். இடது மணிக்கட்டில் மச்சம் உள்ள பெண் நல்ல இல்லத்தரசியாக இருப்பார். மேலும் இடது மணிக்கட்டில் மச்சம் இருப்பது தொழிலுக்கு நல்லது.
உள் மணிக்கட்டில் மச்சம்
உள் மணிக்கட்டில் மச்சம் உள்ளவர் புத்திசாலியாகவும், நல்ல சிந்தனையுடனும், எப்பேற்பட்ட பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மற்றும் தீர்க்கும் அளவில் தைரியம் கொண்டவர்களாக இருப்பர்.
உள்ளங்கையில் மச்சம்
ஒருவரது வலது உள்ளங்கையின் நடுவே மச்சம் இருந்தால், அந்நபர் வாழ்வில் மிகுந்த புகழும் பெயரும் பெறுவார். அத்தகையவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களை மிகவும் நேசிப்பார்கள். இடது உள்ளங்கையின் நடுவில் உள்ள மச்சம் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாகும்.

கையின் பின்புறத்தில் மச்சம்
கையின் பின்புறத்தில் பள்ளம் உள்ளவர் நல்ல பண மேலாளராக இருப்பார் மற்றும் குடும்பத்தின் பொருளாதார பலத்தை புரிந்து கொள்வார்கள்.
கையின் பின்புறத்தில் மச்சம் இருந்தால், அவர் திறமையானவர் மற்றும் வாழ்வில் விரைவில் பதவி உயர்வு பெறும் அதிர்ஷ்டசாலி.