ஏ.ஆர். ரஹ்மான் விவாகரத்து: மகன் வெளியிட்ட பதிவு
இசை புயல் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு குறித்து வெளியிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியதாக குறிப்பிட்டார்.
அதனை தீர்ப்பதற்கு இருவரும் முயற்சித்த போதிலும் தோல்வியுற்றதால் இந்த கடினமான முடிவை எடுப்பதாகவும் சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.
மகன் அமீன் பதிவு
ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குறித்த விடயம் தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ,"என் அப்பா ஒரு legend. அவர் இசையமைப்பிற்காக மட்டும் அல்ல, அவர் பல வருடங்களாக சேர்ந்து வைத்த மரியாதை, மதிப்பு மற்றும் அன்பு தான் காரணம்.
அவரை பற்றி பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் புறப்படுவதை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். இப்படி பொய் தகவல்களை பரப்பாதீங்க" என குறிப்பிட்டுள்ளார்.
