Bigg boss 7: தன்பால் ஈர்ப்பாளரை அசிங்கப்படுத்திய போட்டியாளர்- மோகன்லால் கொந்தளிப்பு
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்பால் ஈர்ப்பு பற்றி இழிவாக பேசிய போட்டியாளரை மோகன்லால் கண்டித்த காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாள பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், தற்போது மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இப்படியான ஒரு நிலையில், மலையாள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசப்பட்ட விடயம் இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது மலையாளம் பிக்பாஸ் சீசன் 7-ல் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஆதிலா மற்றும் நூரா ஆகிய இருவரும் ஒருபாலின தம்பதியாக விளையாடி வருகிறார்கள்.
விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறலாம்..
இதற்கிடையில், வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்த வேத்லட்சுமி மற்றும் மஸ்தானி இருவரும் ஒன்றாக இணைந்து ஆதிலா மற்றும் நூரா மற்ற போட்டியாளர்களுடன் சகஜமாக பழகி விளையாடினார்கள்.
ஆனால் லட்சுமி, மஸ்தானி உள்ளே நுழைந்த நாள் முதல் ஒருபாலின தம்பதி பற்றி பல விமர்சனங்களை முன் வைத்து வந்தனர்.
அதிலும் குறிப்பாக லட்சுமி, “இது போன்று உறவுகளில் இருப்பவர்களை நான் வீட்டிற்கு உள்ளே கூட விடமாட்டேன்..” என பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயம் குறித்து கடந்த வாரம் பேசிய மோகன்லால், “ஒரு பாலின ஜோடிகள் சேர்ந்து வாழ்வதற்கு நீதி மன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆதிலா மற்றும் நூரா இருவரும் நாங்கள் தேர்வு செய்து உள்ளே சென்றவர்கள். நீங்களும் இவர்கள் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்டு தான் விளையாட வந்தீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சக மனிதரை எப்படி அப்படி நடத்த முடியும். அவர்களை அசிங்கமாக பேசுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக உங்களுக்கு இவர்களுடன் விளையாட விருப்பம் இல்லாவிட்டால் தாராளமாக வெளியேறலாம்..” என கடுமையாக சாடியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |