omicron vaccine; ஓமிக்ரோன் தடுப்பூசி கண்டுப்பிடிப்பு? எப்படி செயல்படும்.. அமெரிக்கா நிறுவன தகவல்!
கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த வகையான ஓமிக்ரோன் வைரஸ் உலக நாடுகள் எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால், இதன் பிடியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளனர். 90- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள ஓமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.
இந்தியாவில், மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன், 7-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாதிப்பை எட்டியுள்ளது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா தடுப்பூசி நிறுவனம், ஓமிக்ரோனை தங்கள் நிறுவன தடுப்பூசி கட்டபடுத்துவதாக அறிவித்துள்ளது. இதைப்பற்றி அந்நிறுவனம் தெரிவிக்கையில், 2 டோஸ் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டால் ஓமிக்ரோனுக்கு எதிரான ஆன்டிபாடிகளை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், 50 மைக்ரோகிராம் பூஸ்டர் டோஸ் மருந்து, பூஸ்டருக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது 37 மடங்கு ஓமிக்ரோனுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி அளவை அதிகரிப்பதாக கூறியுள்ளது.
பின் 100 மைக்ரோகிராம் மருந்தை செலுத்தினால் 83 மடங்கு ஓமிக்ரோனுக்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும், அதிகாரிகளுடன் தரவுகளைப் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.