உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மொச்சை சுண்டல்... இப்படி செய்து பாருங்க
உடலில் சமநிலையை நிர்வகிப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒரு முக்கிய ஊட்டச்சத்தாக அறியப்படும் சோடியத்தை சீரான அளவில் கொண்டுள்ள மொச்சை உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் பெரும் பங்க வகிக்கின்றது.
இந்தவகைகயில், ஒரு கப் அளவிலான மொச்சையில் தோராயமாக 38 மி.கி அளவு சோடியம் காணப்படுகின்றது. எனவே மொச்சைக் கொட்டையானது உயர் இரத்தஅழுத்தத்தைத் கட்டுக்குள் வைப்பதில் பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது.
இவை உயர் இரத்த அழுத்தத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துடன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கு மொச்சையில் எவ்வாறு அசத்தல் சுவையில் சுண்டல் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மொச்சை - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
வறுத்து அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
மல்லி - 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கட்டி பெருங்காயம் - 1 சிறிய துண்டு
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து வறுத்த மொச்சையை தண்ணீரில் ஒருமுறை கழுவி, அதில் நன்கு கொதிக்க வைத்த சூடான நீரை ஊற்றி, மூடி வைத்து 4 மணிநேரம் ஊறவிட வேண்டும்.
பின்னர் குக்கரில் மொச்சையை நீருடன் அப்படியே சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி, 4-5 விசில் வரும் வரையில் நன்றாக வேகவிட்டு இறக்கிவிட வேண்டம்.
குக்கர் விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிவிட்டு, மொச்சையை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் அதனுடன் கட்டி பெருங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து இறக்கி ஆறியதும், ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வேக வைத்த மொச்சையையும் அதில் சேர்த்து, அத்துடன் அரைத்த பொடியையும் சேர்த்து, துருவிய தேங்காயை தூவி நன்றாக கிளறி விட்டு, இறுதியாக கொத்தமல்லியைத் தூவினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மொச்சை சுண்டல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
