ஆபாச படத்திற்கு அடிமையாகும் குழந்தைகள்: இதற்கு காரணம் பெற்றோர்களா? விழிப்புணர்வு பதிவு
அதீத மொபைல் உபயோகம், கட்டுப்பாடுகளற்று டிஜிட்டல் திரையைப் பார்ப்பது போன்றவை பார்வைக் குறைபாடு தொடங்கி பலவகையான உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
உடலுறுப்பு சார்ந்த வளர்ச்சி, பேச்சுத்திறன், பார்வைத்திறன் போன்றவை முழுமைபெற்ற பெரியவர்களுக்கே டிஜிட்டல் திரைகள் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கின்றது.
சில பெற்றோர்கள் குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிக்கின்றனர் என்றால் உடனே மொபைல் போனை கையில் கொடுத்து விடுகின்றனர். இது மிகப்பெரிய பின்விளைவினை ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதே போன்று வயதிற்கு வந்த பிள்ளைகளிடம், மொபைல் போன் தேவை என்றால் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் எண்ணங்களில் தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். காரணம், வளர்ந்த குழந்தைகளுக்கு, அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கும்.
அதனாலேயே மொபைலில் வீடியோக்கள் பார்க்கும்போது, 'அடுத்து என்ன' என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள். இது, மிக இளம் வயதிலேயே 'அடல்ட் வீடியோ' பார்க்கும் பழக்கத்துக்கு அவர்களை உட்படுத்தக்கூடும்.
மொபைல் போனை தொடர்ச்சியாக அவதானிக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அறியலாம்.

பாதிப்புகள் என்ன?
குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஒளிரும் திரையை பல மணிநேரம் பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட்டு சிவந்து போவதுடன், கண்கள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகின்றது. இதனாலேயே குழந்தைகளுக்கு இளம்வயதில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டுவிடுகின்றது.
எப்படி தவிர்ப்பது?
ஒரே நாளில் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளை மாற்றமுடியாது என்பதால் முதலில் பெரியவர்கள் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
பின்பு மொபைல் போன் கொடுக்கும் நேரத்தினை குறைக்கவும். அதே போன்று மொபைலை குழந்தைகளிடம் கொடுக்கும் போது ஏரோ பிளைன் மோடில் போட்டு கொடுத்தால், அதிகமான கதிரியக்க பாதிப்ப உண்டாகாமல் தவிர்க்கலாம். மேலும் கேம்ஸ் போன்ற ஆப்ஷனைப் பயன்படுத்தமுடியாது.
வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடும் பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும், பெரியவர்களும் அவர்களுடன் விளையாடினால் அவர்களுக்கும் ஆர்வம் அதிகமாகும்.
குழந்தைகள் போனை அவதானிக்கும் போது குனிந்து அமராமல் நேராக இருப்பதை கண்காணிக்க வேண்டும், ஏனெனில் கழுத்து நரம்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சற்று பெரிய குழந்தைகள் வீட்டிற்குள்ளே மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கின்றனர்.
