கழிவறை செல்லும் போதும்கூட மொபைல் பயன்படுத்துறீங்களா? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மொபைல் போன்
இன்றைய நவீன காலத்தில் மொபைல் போன் என்பது அனைவரது கைகளிலும் இருக்கின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்வசாதாரணமாக பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான நபர்களுக்கு மொபைல் போன் அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில், ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு உபகரணமாகவும் இருக்கின்றது.
image: shutterstock
இவ்வாறு மொபைல் போனிற்கு அடிமையாகி வரும் நிலையில், சிலர் கழிவறைக்கு செல்லும் போது கூட எடுத்துச் செல்கின்றனர்.
கழிவறையில் செல்போன் பார்த்துவிட்டு, மணிக்கணக்காக அமர்ந்திருக்கும் பழக்கம் தற்போது அதிகமாகி வருகின்றது. ஆனால் இவ்வாறு கழிவறைக்கு மொபைல் போனை எடுத்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Viral Video: ராட்சத பெண் அனக்கோண்டாவின் வாயிலிருந்து மற்றொரு அனக்கோண்டாவா?... புல்லரிக்க வைக்கும் காட்சி
பிரச்சனைகள் என்ன?
கழிவறையில் நீண்ட நேரம் மொபைல் போனுடன் அமர்ந்திருப்பது ஆசன வாயில் பல அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மலச்சிக்கல் ஏற்படுவதுடன், நாள்பட்ட செரிமான பிரச்சனைகளை சந்திக்கும் நிலையும் ஏற்படும். மேலும் தொடர்ந்து ஆசனவாயில் கொடுக்கப்படும் அதிக அழுத்தத்தினால் ரத்த நாளங்கள் வீங்குவதுடன், இதனால் மூலம் போன்ற பிரச்சனையும் ஏற்படுமாம்.
மேலும் அதிக நேரம் மொபைல் போனுடன் அமர்ந்திருப்பது கழிவறையில் பரவியிருக்கும் கிருமிகள், பாக்டீரியாக்கள், மொபைல் போனிலும் பரவுகின்றது.
இதனால் மொபைல் போனில் உள்ள பாக்டீரியாக்கள் நமது உடம்பிற்குள் எளிதாக சென்று பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படவும், நோய் தொற்று பிரச்சனை ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
