மொபைல் சார்ஜரால் பரிபோன 8 மாத குழந்தையின் உயிர்.... பெற்றோர்களின் அலட்சியம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
சந்தோஷ் தனது மொபைல் போனை வழக்கம் போல் சார்ஜ் போட்டுள்ளார். பின்பு மொபைலை சார்ஜரிலிருந்து எடுத்த அவர், சுவிட்டை ஆஃப் செய்யாமல் இருந்துள்ளார்.
அப்பொழுது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சார்ஜரை எடுத்து வாயில் வைத்துள்ளது. அடுத்த நொடியே மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வந்த தாய் உடனே மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |