பதவியேற்பு விழா தேதியை அறிவித்த மு.க ஸ்டாலின் - எப்போது தெரியுமா?
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தன.
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில், 91,776 வாக்குகள் பெற்று 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். இதனிடையே, மு.க ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்பு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கொரோனா பேரிடர் காரணமாக, ஆளுநர் மாளிகையில் எளியமுறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
எனவே வரும் 7ஆம் தேதி, ஆளுநர் மாளிகையில் புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.