முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
தற்போது முடி நரைக்கும் பிரச்சனை எல்லோருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. அதிலும் இளம் வயதிலேயே முடி நரைப்பது பெரும் பிரச்சனை.
இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் தோன்றும். இது வருவதற்கு காரணம் மாறிவரும் வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்கள் தான்.
இதை சரி செய்ய இரசாயன பொருட்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு. எனவே இந்த பதிவில் நரைமுடைியை எப்படி கருப்பாக்குவது என்பதற்கான வழிமுறையை பார்க்கலாம்.

இயற்கையாக முடியை கருப்பாக்க
மருதாணியுடன் வாழைப்பழம் - மருதாணியுடன் பழுத்த வாழைப்பழத்தைச் சேர்த்து தடவினால், முடி மிகவும் பளபளப்பாக மாறும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் இயற்கை எண்ணெய்கள் முடியை மென்மையாக்குகின்றன.
இதற்கு, தேவையான மருதாணிப் பொடியை இரவே தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள், அதில் நன்கு பழுத்த வாழைப்பழக் கூழைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைப்பட்டால், சிறிது தயிர் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். இந்த கலவையை முடி முழுவதும் தடவி, குறைந்தது ஒரு மணி நேரம் அப்படியே விடவும்.
பின்னர், லேசான ஷாம்பு கொண்டு தலைக்குக் குளிக்கவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், உங்கள் முடி மிகவும் மென்மையாக மாறும்.

மருதாணியுடன் வெந்தய ஹேர் பேக் - குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகமாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்த, மருதாணி மற்றும் வெந்தய ஹேர் பேக் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
தலையில் பொடுகு பிரச்சனையை மட்டுமல்ல, தொற்றுகளையும் இந்த கலவையால் நிறுத்த முடியும். இதற்கு, இரண்டு டேபிள்ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள், இந்த வெந்தயத்தை மென்மையான பேஸ்டாக அரைக்கவும். இந்த கலவையில் மருதாணிப் பொடியுடன் சேர்த்து நன்கு கலக்கி முடிக்குத் தடவி, ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் போதும்.

மருதாணியுடன் நெல்லிக்காய் பொடி - முடி உதிர்வைக் குறைக்கவும், அடர்த்தியான முடியை வளர்க்கவும், மருதாணி மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம்.
இதற்கு, மூன்று டேபிள்ஸ்பூன் மருதாணிப் பொடி மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் ஒரு முட்டை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை திக்கான பேஸ்டாக செய்து, தலை மற்றும் முடிக்குத் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் போதும். இதுபோன்ற இயற்கை வழியில் நரைமுடியை கருப்பாக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |