இந்த வருசத்தோட ‘த்ரில்’ மேட்ச் இதுதான்..! இறுதி ஓவரில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்... தீயாய் பரவும் வீடியோ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டி தற்போது சமூகவலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வை விளையாடியது. ஏற்கனவே தொடரை தவறவிட்டதால், எஞ்சிய போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டியது. இதனால் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை குவித்தது.
Brilliant Final Over By Starc ? pic.twitter.com/yS3Wy1eMOE
— ? (@UsthaddVirat) July 15, 2021
இதனை அடுத்து 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இந்த சமயத்தில் ரசல் மற்றும் ஃபேபியன் ஆலன் ஜோடி சேர்ந்தனர். இந்த கூட்டணி காட்டிய அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மெல்ல மீண்டது.
போட்டியின் 19-வது ஓவரில் ரசல் ஒரு சிக்சர் அடிக்க, ஃபேபியன் ஆலன் ஹாட்ரிக் சிக்சர் விளாசி, கடைசி பந்தில் அவுட்டானர். இதனால் அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தது.
It all came down to Starc v Russell! ?? #WIvAUS pic.twitter.com/jsQZrpkP3S
— cricket.com.au (@cricketcomau) July 15, 2021
இதனை அடுத்து கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இருந்தது. தொடர்ந்து 4 பந்துகளில் ஒரு ரன் கூட ரசலால் எடுக்க முடியவில்லை ஆனால் 5-வது பந்தும் டாட் பாலாக அமைய, கடைசி பந்தில் மட்டும் அவர் சிக்சர் விளாசினார்.
இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த போட்டியில், சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு வழி வகுத்த மிட்சல் ஸ்டார்க்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.