ஒருவரின் வாழ்க்கையை வீணடிக்கும் தவறுகள்! வெற்றியாளர்களாக மாற சில டிப்ஸ்..
இன்றைய நவீன வளர்ச்சியால் தமது வேலைகளை தாமே செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.
இது போன்று நாம் எமது வேலைகளை சரியாக செய்துக் கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை கூறலாம்.
அந்த வகையில் ஒருவரின் வாழ்க்கையை வீணடிக்கும் விடயங்கள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
வாழ்க்கையை வீணடிக்கும் தவறுகள்
அதிக நேரம் கைபேசி பாவணை
தற்போது அனைவரிடமும் கைபேசி இருக்கும், தேவையற்ற நேரங்கள் அதனை பாவித்தல் அதாவது சமூக வலைத்தளங்களில் இரவில் உறங்காமல் சாட்டிங் செய்வது போன்ற பழக்கங்களை தமது வாழ்க்கையை வீணடிக்கும் பழக்கங்கள் என கூறலாம்
உடற்பயிற்சி செய்யாமல் நன்றாக உறங்குவது
ஒரு மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு அதற்கு சீரானதொரு இரத்த ஓட்டம் தேவை. இவை சீராக இல்லாவிடின் உடல் சோர்வடையும் இதனால் களைப்பு, சோம்பல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
காதல் தொடர்பான சர்ச்சைகள்
இன்றைய காலக்கட்டங்களில் அதிகமாக சமூக வலைத்தளங்கள் காதல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமையளிக்கிறது.
தேவையற்ற நேரங்களில் உறக்கம்
இரவு வேலைகளில் உறங்காமல் இரவில் கைபேசியில் இருந்துவிட்டு பகலில் உறங்குவது.
அதிக தொலைக்காட்சி பார்த்தல்
விடுமுறை நாட்களில் 24 மணித்தியாலங்களும் தொலைக்காட்சியை பார்வையிடுதல். இதனால் உடலிலுள்ள சக்திகள் அனைத்தும் இழக்கப்பட்டு உடல் சோர்வு ஏற்படும்.
புதிய வகையான வீடியோ கேம்ஸ் விளையாடுதல்
இன்றைய இணையத்தில் பப்ஜி, ப்ரீபயர் உள்ளிட்ட வீடியோ கேம்ஸ் வைரலாகி வருகிறது. இதனால் 12 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பிட்ட பிள்ளைகள் அதிகமாக தொலைபேசி பாவணையில் அதிகமாக நாட்டம் காட்டுகிறார்கள்.
