காணாமல் போன கணவர்... போனுக்கு 2 ஆண்டுகளுக்கு பின்பு வந்த மெசேஜ்! அண்ணியின் கொடூரம் அம்பலம்

money husband kill Kanchipuram miss
By Jon Mar 17, 2021 04:32 PM GMT
Report

சொத்துக்காக மைத்துனரைக் கொலை செய்த அண்ணி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு செல்போன் மெசேஜ் மூலம் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், ஜெம் நகரில் வசித்து வந்தவர் கொஞ்சி அடைக்கான் (40). இவரது மனைவி பழனியம்மாள் (34). இவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னையன்பட்டியை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி வேலைக்கு சென்ற கொஞ்சி அடைக்கான் வீடு திரும்பவில்லை என்பதால் மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த பொலிசார் எந்த தகவலும் இல்லாததால் புகாரை கிடப்பில் போட்டுள்ளனர். .இந்நிலையில் கொஞ்சியின் மனைவி அவரது சிம் கார்டை தனது மொபைலில் சமீபத்தில் போட்டுள்ளார். அதில் கொஞ்சியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 3.5 லட்சம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்த நிலையில், மனைவி பழனியம்மாள் பொலிஸ் உயர்அதிகாரி ஒருவரிடம் புகார் கொடுத்துள்ளார்.

விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கொஞ்சி அடைக்கான். கடந்த 2009ம் ஆண்டு, ஸ்ரீபெரும்புதூரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துள்ள வந்த நிலையில், அங்கு வீடும் கட்டியுள்ளார். பின்பு அவர், தனது பெரியம்மா மகனையும், அவரது மனைவி சித்ரா, மற்றும் 2 மகள்கள், ஒரு மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததோடு, அண்ணனுக்கு வேலை இல்லாததால் ரூபாய் 3 லட்சம் கொடுத்து கார் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் அண்ணிக்கும், கொஞ்சிக்கும் தவறான பழக்கமும் இருந்துள்ளது. இதனை அறிந்த சித்ராவின் கணவர் தனது சொந்த ஊருக்கு வந்துவிட்ட நிலையில், சித்ராவும், கொஞ்சியும் தான் கட்டிய வீட்டில் வசித்துள்ளனர். பின்பு 2015ம் ஆண்டு பழனியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்துவிட்டு, தான் கட்டிய வீட்டிற்கு வந்த போது, சித்ரா சண்டையிட்டு, திருமணம் செய்துவிட்டு இங்கு தங்கக்கூடாது என்று தகராறு செய்ததால், காஞ்சிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கியுள்ளதுடன், இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்துள்ளது.

இந்த வேளையில் சுபத்திரா நகரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்ய கொஞ்சி அடைக்கான் முயற்சி செய்ததோடு, ஐந்து லட்சம் முன்பணமும் நபர் ஒருவரிடம் வாங்கியுள்ளார். இதையறிந்த சித்ரா, கொஞ்சி அடைக்கானை கொலை செய்துவிட்டால் இந்த வீடு நமக்கு சொந்தமாகிவிடும் என முடிவு செய்து, மகளின் காதலன் ஏழுமலை, மற்றும் தனது மகன், கூலிப்படை தலைவர் ஒருவரை வைத்து கொஞ்சியைக் கொலை செய்து இரும்பு பேரலில் அடைத்து ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய கிணற்றில் வீசி சென்றுள்ளார்.

கொஞ்சியின் கொலைக்கு காரணமானவரை பொலிசார் தேடி வருவதோடு, மலைப்பட்டு பகுதியில் உள்ள கிணற்றின் தண்ணீரை இரைத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்காக எலும்பு கூடுகளை சேகரித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான சித்ராவின் வழக்கறிஞர், அவரது கள்ளக்காதலன் உட்பட 8 பேரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US