நடைபயிற்சியின் போது காணாமல் போன முதியவர்... பாட்டியின் நெக்லேஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்
மும்பையில் நடைபயிற்சி சென்ற மூதாட்டி காணாமல் போன நிலையில், அவரது பேரன் இன்றைய தொழில்நுட்பத்தினைக் கொண்டு கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன பாட்டி
இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் பலர் பிரச்சனையில் சிக்கிக்கொண்டாலும், சிலருக்கு இவை பயனுள்ளதாகவே இருக்கின்றது.
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பேரன் ஒருவர் தனது பாட்டியினை கண்டுபிடிப்பதற்கு உதவியுள்ளது. ஆம் சாயரா பீ தாஜுதீன் முல்லா என்ற 79 வயது மூதாட்டி நடைபயிற்சியின் போது காணாமல் போயுள்ளார்.
ஆனால் பாட்டி தனது கழுத்தில் டாலர் வைத்த செயின் ஒன்றிணை அணிந்திருந்துள்ளார். இந்த செயின் டாலரில் பேரன் சமார்த்தியமாக ஜிபிஎஸ் டிராக்கர் கருவியை பொருத்தியுள்ளார்.

பேரன் கண்டுபிடித்தது எப்படி?
இதனால் ஜிபிஎஸ் டிராக்கர் கருவியினை செயல்படுத்தி பார்த்த பின்பு பாட்டி பரேலில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை ஒன்றில் இருப்பது தெரியவந்துள்ளது.
பாட்டி நடைபயிற்சி செல்லும் போது இருசக்கர வாகனம் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது பாட்டி குணமடைந்து வரும் நிலையில், சரியான நேரத்தில் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பேரன் செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இன்றும் இம்மாதிரியாக நமது வீட்டு பெரியவர்கள் வெளியே செல்லும் போது அவர்களைக் கண்காணிப்பதற்காக இவ்வாறான தொழில்நுட்பத்தினை கூட நாம் பயன்படுத்தலாம்.