காணாமல் போன பிரபல நடிகை: சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்
actress raima
body missing
By Manchu
வங்க தேசத்தின் பிரபலமான நடிகையான ரைமா இஸ்லாம் சிமு(45) இறந்த உடலை கோணிப்பையில் இருந்து பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாபாகன் காவல் நிலையத்தில் ரைமாவின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் குறித்த நடிகையை தேடிவந்தனர். இந்நிலையில் டாக்காவின் புறநகர்ப் பகுதியில் சாக்குமூட்டையில் இருந்த ரைமாவின் உடலை மீட்டுள்ளனர்.
குறித்த நடிகையின் உடலை உடற்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ரைமாவின் கணவர் ஷகாவத் அலியிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தாம் தான் இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US