73ஆவது உலக அழகி போட்டி : 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசுக்கு உலக அழகி பட்டம்!
வியட்நாமில் நடைபெற்ற 73ஆவது உலக அழகி போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ் உலக அழகி பட்டத்தை வென்றார். நடப்பாண்டுக்கான உலக அழகி போட்டியில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட எரித்தியா, ஸ்பெயின், மலேசியா, வியட்நாம், டொமினிகன் குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

44 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த வெற்றி
இறுதிச்சுற்றில் சிறப்பாகப் போட்டியிட்ட டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 24 வயதான ஜோஹெய்ரி மொலா டொமிங்கஸ், உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் சமூகப் பணியாளர் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்ட இவர், தனது வெற்றியின் மூலம் டொமினிகன் குடியரசின் அழகிப் போட்டி வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இதனிடையே, ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர் அப்பாகவும், மலேசியாவைச் சேர்ந்த டானுசியா செட்டி இரண்டாவது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.

சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஒருவர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |