சூரிய ஒளியால் பொலிவிழந்த சருமத்திற்கு புதினா இலை - இப்படி பூசுங்க
சருமம் பொலிவிழக்க முக்கிய காரணம் நாம் சூரிய ஒளியில் நடப்பது தான். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தி, சருமத்தின் மந்தநிலை, பழுப்பு நிறம் மற்றும் சீரற்ற சரும நிறத்தை ஏற்படுத்தும்.
இதற்காக சருமத்தை பாதுகாக்கும் எண்ணத்துடன் சிலர் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் சன்ஸ்கிரினும் செயற்படாமல் போகும்.
இதற்கு ஆயுள்வேதத்தில் உள்ளபடி புதினாவை வைத்து ஒரு தீர்வு செய்யலாம். அது என்னவென்பதை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொலிவிழந்த சருமம்
வெள்ளரிக்காய் மற்றும் புதினா - 2 தேக்கரண்டி வெள்ளரி சாறு 1 தேக்கரண்டி புதினா பேஸ்ட் 1 தேக்கரண்டி தயிர் போன்ற பொருட்களை ஒரு பாத்திரத்தில் கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். இதனால் சூரிய கதிர்கள் சருமத்தை தாக்காமல் இருக்கும்.
கிரீன் டீ மற்றும் கற்றாழை - 2 டீஸ்பூன் கிரீன் டீ 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் தேன் பொன்ற பொருட்களை எடத்துக்கொள்ளவும். முதலில் கிரீன் டீ தயாரித்து குளிர்விக்கவும்.
இப்போது கிரீன் டீயில் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்கவும். இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடவும். இது டானை நீக்க உதவுவது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் ஏற்படும் எரிச்சலூட்டும் சருமத்திற்கும் நிவாரணம் தரும்.
கற்றாழை மற்றும் சந்தனம் - இந்த ஃபேஸ் பேக் டானைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வெயிலிலிருந்து தணிக்கவும் உதவுகிறது.
இதற்கு 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன் சந்தனப் பொடி 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களை எடுத்து கலவையாக செய்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு கழுவினால் சருமம் சூரிய ஒளியல் இருந்து பாதகாப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |