விஜய்யுடன் டூயட் பாடிய இந்த நடிகை எப்படியிருக்கிறார் தெரியுமா?
திரையுலகில் ஒரே ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடித்து காணாமல் போனவர்கள் பட்டியலில் ஒருவர் தான் மின்சார கண்ணா படத்தில் நடித்த மோனிகா.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான மின்சார கண்ணா படத்தில், காதல், பாட்டு, நகைச்சுவை என அனைத்துமே ஹிட் அடித்தது.
ஆண்களையே வெறுக்கும் குஷ்புவின் மனதை மாற்றி தன்னுடைய காதலியை விஜய் எப்படி கரம்பிடிக்கிறார் என்பதே கதை.
இப்படத்தில் விஜய், மோனிகா, குஷ்பு, ரம்பா, மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருத்திருந்தனர்.
வெளிநாட்டில் வசிக்கும் பணக்கார குடும்பமான மணிவண்ணனின் குடும்பம், மகன் விஜய்யின் காதலிக்காக தமிழ்நாட்டுக்கு வந்து கஷ்டப்பட்டு ஜெயிப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் மோனிகா, அடுத்தடுத்து படங்களின் மூலம் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது, எங்கே சென்றார் என தேடியபோது இந்தி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யபிரகாஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடால் ஒரே ஆண்டில் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் சீரியல், சினிமா நிகழ்ச்சிகள் என நடித்துக்கொண்டிருக்கிறாராம் மோனிகா.
இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.