செந்தில் பாலாஜிக்காக பிரார்த்தனை செய்யும் பிக்பாஸ் பிரபலம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்காக திருவண்ணாமலையில் வேண்டுதல் வைத்து பிரார்த்தனை செய்திருக்கிறார் பிக்பாஸ் தாடி பாலாஜி.
தாடி பாலாஜி
தமிழில் காமெடி நடிகராக வலம் வருபவர் தான் தாடி பாலாஜி, இவரும் இவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனித்தனியாக இருவரும் கலந்து கொண்டிருந்த போதும், இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போதும் பொய்யாகிபோனது.
தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.
செந்தில் பாலாஜிக்காக பிரார்த்தனை
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த வேளையில், நள்ளிரவு அமைச்சர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து நெஞ்சுவலியால் துடிதுடித்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பை பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தான் செந்தில் பாலாஜிக்காக தாடி பாலாஜி உடல் நலம் தேறி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.
மேலும், அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை கோவிலில் உள்ள மூக்குப்பொடி சித்தரிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார்.