அமைச்சர் மீது நடிகை வழங்கிய புகார்... பாதுகாவலர் மற்றும் உதவியாளரிடம் தீவிர விசாரணை
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பிரபல நடிகை வைத்த குற்றச்சாட்டினால், மணிகண்டனின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் இரண்டு பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
பிரபல திரைப்பட நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மீது வன்கொடுமை, கட்டாய கருக்கலைப்பு, தன்னுடன் 5 வருடம் வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து பொலிசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு ஒன்றினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் சாந்தினி தரப்பில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், நடிகை தாக்கல் செய்த மனு நீதிமன்றத்திற்கு வராததால் வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைக்கப்பட்டதுடன், அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கிடையில், மணிகண்டனின் முன்னாள் பாதுகாவலர் மற்றும் உதவியாளருக்கு விசாரணைக்காக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று இருவரும் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
இந்நிலையில் பொலிசார் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.