அட்டகாசமான அம்சங்களுடன் களமிறங்கும் மினி மின்சார கார் - அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
பெட்ரோல் டீசல் உயர்வால் மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் மின் வாகனங்களை வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனால், பல முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நாட்டில் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மினி நிறுவனம் ஆனது எலெக்ட்ரிக் காரை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவை கூப்பர் எஸ்இ (Cooper SE) அல்லது மினி எலெக்ட்ரிக் (Mini Electric) எனும் பெயரில் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காரில், மஞ்சள் நிற அணிகலன்கள், புதிய ஸ்டைலிலான வீல், வழக்கமான கிரில்லிற்கு பதிலாக ஸ்மூத்தான பேனல், சார்ஜிங் செய்யும் பகுதி உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றன.
இவை மட்டுமின்றி, 5.5 அங்குல வட்ட வடிவ டிஜிட்டல் திரை காருக்குள் இடம் பெற இடம்பெறும். இது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக செயல்படும். இந்த திரையை சுற்றிலும் மஞ்சள் நிற ஹைலைட்டர்கள் வழங்கப்படும். அதனைத்தொடர்ந்து, பிரீமியம்தர இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட கன்சோல், ரீஜெனரேட்டீவ் பிரேக்கிங் மற்றும் டிரைவ் மோட்கள் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 233 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இது ஓர் டபிள்யூஎல்டிபி தர பேட்டரி ஆகும். மேலும், இந்த எலெக்ட்ரிக் காரை 11W சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீத வரை சார்ஜை 2.5 மணி நேரங்களை மட்டுமே எடுத்துகொள்ளுமாம்.
இதுவே, 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்தால் 35 நிமிடங்களிலேயே 80 சதவீத சார்ஜை இதன் பேட்டரிகள் பெற்று விடும் என்பது ஆச்சரியமான விஷயம்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்திவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ரூ. 50 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் கார் ஓர் பிரீமியம் தர வாகனம் என்பதால் இத்தகைய உச்சபட்ச விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.
The future is here. Are you ready?#TheFirstAllElectricMINI #ChargedWithPassion #MINIIndia #ElectricVehicle #EV #ElectricAutomobile #GoElectric #MINIElectric⚡️ #BIGLOVE #MINILife #MINIGram #MINIGoesElectric #ElectricCar #ElectricLife #EnvironmentFriendly #ElectricTomorrow pic.twitter.com/fmo9lgOHqx
— MINI INDIA (@MINIOfficial_IN) October 22, 2021