பூமியில் தென்படும் இரண்டாம் நிலவு: எப்போது பூமி சுற்றுப்பாதையை விட்டு விலகும்?
ஆகஸ்ட் 29 ம் திகதி பூமியை சுற்றிவரும் நிலவுடன் சேர்ந்து இரண்டாவதாக ஒரு நிலவும் சுற்றி வந்துள்ளது. இதை பற்றிய முழுமையான விடயத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
இரண்டாம் நிலா
நாம் வாழும் பூமி கோளானது சூரியனை சுற்றி வருகிறது. இது பூமியை சுற்றிக் கொண்டே சூரியனையும் நிலவு சுற்றி வருகிறது. பூமியை நிரந்தரமாக நிலா சுற்றி வருவதால், பூமியின் துணைக்கோளாக நிலவு கருதப்படுகிறது.
விண்வெளியில் 9 கோள்களை தவிர இதர சிறுகோள்களும் மற்றும் குறுங்கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதே போல தான் தற்போது ஒரு சிறிய சிறுகோள், பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வருகிறது.
இந்த கோள் செப்டம்பர் 29 மற்றும் நவம்பர் 25 க்கு ஆகிய நாட்களுக்கு இடையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு பூமியை சுற்றும். இந்த சிறுகோளுக்கு 2024 PT5 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வின்படி இந்த கோள் பூமியின் தற்காலிக ‘மினி நிலவாக’ இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதை நிலவைப்போல வெறும் கண்ணாலோ அல்லது தொலைநோக்கி அல்லது வீட்டு தொலைநோக்கியால் பார்ப்பது கடினம் என்றே வானியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது சுமார் 33 அடி (10 மீட்டர்) அகலம் கொண்டதாக நம்பப்படுகிறது. மேலும் இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சிறுகோள் ஆகஸ்ட் 7ம் திகதி கண்டறியப்பட்டுள்ளது. ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055ல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |