இந்த ஆண்டின் இறுதி சூரிய கிரகணம்: எப்போது நிகழும் இதனால் உண்டாகும் சிறப்பம்சம் என்ன?
தற்போது இரண்டாவதாக உண்டாகும் சூரிய கிரகணம் எங்கு, எப்போது ஏற்படும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பவை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த ப்ரல் மாதம் இடம்பெற்றது. இந்த நிலையில் தற்போது அக்டோபர் 2ம் திகதி நெருப்பு வளையமாக சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்பதுசூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன், சூரியனை முழுமையாக மறைக்கிறது.
அதனால் மறைக்கப்பட்ட பகுதியை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுகிறது. அது பார்ப்பதற்கு நெருப்பினால் வளையம் அமைந்தது போன்று தோன்றும்.எப்போதும் அமாவாசையில் தான் சூரிய கிரகணம் ஏற்படும்.
இந்த ஆண்டு மகாளய பட்ச நாட்களில் வரும் அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. இந்த மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்காக திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வார்கள்.
இது நிகழும் நேரம் இந்திய நேரத்தின் அடிப்படையில் கூறினால் அக்டோபர் 2ம் தேதி இரவு 9.12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணியுடன் முடிவடைகிறது.
நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும். இந்த சூரிய கிரகணத்தை தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கலாம். மேலும் வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல்,அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் இதன் ஒரு பகுதியை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |