கோடீஸ்வர யோகம் கிடைக்க எந்த பூஜை செய்ய வேண்டும்?
வீட்டில் பணவரவு அதிகரிக்கவும், செல்வம் பெருகவும் ஆன்மீகத்தில் சில எளிய வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை வழிபாடு, தீபம் ஏற்றுதல் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் எளிய செயல்கள் மூலம் மகாலட்சுமி அருள் பெறலாம்.
அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் தாயார் மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சாற்றி வழிபாடு செய்யலாம்.
வீட்டின் பூஜை அறையில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். பர்ஸில் அல்லது பீரோவில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் வைக்கலாம்.
குபேர மூலைக்கு தீபம் காட்டி வழிபாடு நடத்துவது, மஹாலட்சுமி ஸ்தோத்திரம் மற்றும் கன்கதார ஸ்தோத்திரம் படிக்கலாம்.
மேலும், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏழைகளுக்கு தானம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், வீட்டில் பணவரவை அதிகரிக்க சில ஆன்மிக குறிப்புகளை ஜோதிடர் மீனாட்சி தேவி பகிர்ந்துள்ளார்.