7 லட்சத்திற்கு வாங்கிய பண்ணை வீடு.. கோடிக்கணக்கில் கிடைத்த அதிர்ஷ்டம்; இன்ப அதிர்ச்சியில் உரிமையாளர்!
கனடாவின் தலைநகரமான ஒட்டாவாவை சேர்ந்தவர் அலெக்ஸ் ஆர்ச்போல்டு. இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பியானோ இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக் என்ற மூதாட்டியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
76 வயதில், பியானோ ஆசிரியரானா ரேக் கடந்த நவம்பர் மாதம் உயிழந்து விட, ரேக்கின் பழங்கால பண்ணை வீட்டை அலெக்ஸ் ஆர்ச்போல்டு சமீபத்தில் 7 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். இதனையடுத்து, அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியை அலெக்ஸ் ஆர்ச்போல்டு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த வீட்டின் ஒரு இடத்தில் பழங்கால தங்க வைர மோதிரங்கள் இருந்துள்ளன.
இதைக்கண்டு சந்தோஷத்தில் திக்குமுக்காடிய அலெக்ஸ், அவற்றை எடுத்தபோது அதன் அருகிலேயே விலையுயர்ந்த துணிமணிகள் இருந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு தோராயமாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். இதனால், கிடைத்த பொருட்களை எல்லாம் விற்று காசாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் அலெக்ஸ்.
7 லட்சம் கொடுத்து பழைய வீட்டை வாங்கிய நபருக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அலெக்ஸ் ஆர்ச்போல்டு, ‘இந்த பியானோ டீச்சரை சில வருடங்களாக தெரியும். ஆனால் அவர் வீட்டுக்குள் இவ்வளவு பொருட்கள் இருக்கும் என நினைக்கவில்லை.
நான் சந்தித்த பியானோ டீச்சர் உண்மையில் கோடீஸ்வரர் என தனக்கு தெரியாது’ என சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.