நீரிழிவு நோயாளிகளின் கொழுப்பை வேக வேகமாக குறைக்கும் கேப்பை புட்டு... இப்படி செய்யுங்க!
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கவனமாக நிர்வகிக்க வேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது முக்கியம்.
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.
இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும்.
நீரழிவு நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க விரும்பினால் கட்டாயம் காலை உணவாக கேப்பை புட்டு எடுத்து கொள்ளலாம்.
கேப்பை புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
- கேப்பை (கேழ்வரகு) மாவு - ஒரு கப்
- நாட்டு சர்க்கரை - ஓர் உழக்கு
- நெய் - தேவையான அளவு
- ஏலக்காய் - 5
- முந்திரி - 10
- தேங்காய்த் துருவல் - ஒரு கப்
செய்முறை
நெய்யில் முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.
ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு மாவைச் சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி ஊறவைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மாவைக் கட்டியில்லாமல் சலித்து, இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைக்கவும்.
நன்றாக வெந்தபின் தட்டில் கொட்டி கட்டியில்லாமல் உதிர்க்கவும். பிறகு, நாட்டு சர்க்கரையைக் கலந்து வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும். சத்தான சுவையான கேப்பை புட்டு ரெடி.