தினமும் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் அதிகம் நிறைந்த உணவு பால், இதேபோன்று தேனில் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் நன்மைகளும் அடங்கியுள்ளன.
இவை இரண்டையுமே ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
சர்க்கரை, சீனிக்கு பதிலாக பாலில் தேன் கலந்து குடிப்பதால் பல நன்மைகள் நம் உடலுக்கு வந்து சேர்கின்றன.
அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சுவாச பிரச்சனைகளுக்கு தீர்வு
பாலுடன் தேன் கலந்து குடிப்பது நம் உடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது சுவாசக்குழாய் தொற்றுகள், தொண்டை புண் போன்றவற்றை குணப்படுத்த இது சிறந்த தீர்வாகும்.
வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பது வறட்டு இருமல் மற்றும் சளி இருமலுக்கும் தீர்வாகும்.
வயிற்றுக்கு நல்லது
பாலில் தேன் கலப்பதால் உண்டாகும் ஆக்சிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வயிற்றில் ஏற்படும் தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.
இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் அன்றைய நாளுக்கான எனர்ஜி முழுமையும் கிடைத்துவிடும்.
Shutterstock
நல்ல உறக்கம்
இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் நல்ல உறக்கத்தை பெறலாம் என பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேனில் உள்ள இயற்கையான இனிப்பு பண்புகள் நம் உடலின் orexinனை கட்டுப்படுத்துவதால் நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.
Getty Images
எலும்புகளை வலுப்படுத்தும்
எலும்புகள் பலம்பெற தேன் பால் கலவை நல்ல மருந்தாகும், இதிலுள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று.
இதுதவிர தேனில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி பண்புகளும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவி புரிகின்றன.