உங்க வீட்டுல அடிக்கடி பால் திரிந்து போகுதா? அப்போ இந்த ஆபத்து காத்திருக்குமாம்!
பொதுவாக வீடுகளில் ஏதாவது நல்ல காரியத்தின் துவக்கத்தில் பால் பொங்குவது வழமை.
மண் அடுப்பு அல்லாமல் சமைக்கும் அடுப்பில் வைத்து பொங்கி விட்டால் வழமைக்கு மாறான சிரமத்தை கொடுத்து விடும்.
அந்த வகையில் பாலில் அதிகமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றன. இதனை வீணடிப்பது மகாபாவம் என்பார்கள்.
மாறாக வீடுகளில் பால் பொங்கினாலோ அல்லது திரிந்து போய் விட்டாலும் அதற்கு ஆன்மீக ரீதியாக ஒரு விளக்கம் இருக்கும்.
இதன்படி, அப்படி என்ன விளக்கம் இருக்கின்றது? என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அடிக்கடி பால் பொங்குதல்..
வீடுகளில் பால் சூடாக்கும் பொழுது அடிக்கடி பொங்கி வழிந்தாலும், திரிந்து போனாலும் வீட்டிலுள்ள மகாலட்சுமி கோபமாக இருக்கிறார் என பொருட்ப்படுகின்றது. இதனால் பணப்பிரச்சினை அடிக்கடி ஏற்படும். அத்துடன் வருமானமும் மெல்ல மெல்ல குறைந்து விடும்.
மேலும் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகளும், நிம்மதியின்மையும் ஏற்படும்.
இது ஒரு வழமையான விடயம் என்றாலும் அடிக்கடி ஏற்படும் போது சற்று கவனத்திற்கு கொள்ள வேண்டும்.
பரிகாரம்
வீடுகளில் பால் பொங்குவது மட்டுமல்ல பாத்திரம் காய்ந்து போகக் கூடாது. இவ்வாறு நடந்தால் பசுவிற்கு அடிக்கடி தானம் செய்வது நல்லது.
பச்சரிசியும், வெல்லமும் கலந்து பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும் அல்லது வாழைப்பழத்தை வாங்கி தானம் கொடுக்கவும் வேண்டும்.
பால் சுண்டி தீய்ந்து போனால் வீட்டை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து கல் உப்பு, மஞ்சள் கலந்த நீரால் துடைத்து எடுத்து வீடு முழுவதும் தூபம் காட்ட வேண்டும்.
சாம்பிராணி காண்பித்த பின்னர் மீண்டும் ஒரு முறை பால் காய்ச்சி பார்க்க வேண்டும். அதில், ஒரு டம்ளர் பாலை பூஜை அறையில் வைத்து அதில் ஏலக்காய் தட்டி போட்டு பூஜை செய்து பிறகு அதை பிரசாதமாக வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடிக்க கொடுங்கள்.
இப்படி செய்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |