நாவில் வைத்தால் கரையக்கூடிய மில்க் புட்டிங் ரெசிபி
இனிப்பான உணவுகளை உட்கொள்ளும்போதே மனமும் சேர்ந்து இனிக்கும். அவ்வாறான இனிப்பான உணவுகளை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்?
இப்போது வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே இலகுவான மில்க் புட்டிங் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பால் - 1 கப்
முட்டை - 3
சீனி - 5 கரண்டி
பாதாம், பிஸ்தா - 10 கிராம்
ஏலக்காய்பொடி - சிறிதளவு
செய்முறை
முதலில் பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். சீனியை பொடியாக்கி, பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். ஆறிய பாலில் முட்டையை ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக அதில் சீனியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது ஏலக்காய் பொடியைச் சேர்த்து, வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் இட்லிப் பாத்திரத்தில் பாத்திரத்தை வைத்து, அதனை மூடி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.
வெந்ததும் இறக்கி, நன்றாக சூடு ஆறியதன் பின்னர் பாதாம், பிஸ்தாவை அதன் மேல் தூவி 1 மணிநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவம்.
இப்போது நாவில் வைத்தால் கரைந்து போகும் மில்க் புட்டிங் ரெடி.