சீரியலையும் விட்டு வைக்காத மிக்ஜாம் புயல்..ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்
சீரியல் ஷீட்டிங் செய்யும் வீடுகள் மிக்ஜாம் புயல் தாக்கிய காரணத்தால் ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல்
இந்தியா - சென்னையில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி பெய்த கனமழையால் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்த நிலையில், தற்போது சென்னை இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வரத் தொடங்கியுள்ளது.
ஆனாலும் சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் தங்களின் அத்தியாவசியமான தேவைகளை கூட செய்து கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
ஷீட்டிங்கிற்கு வந்த சோதனை
இந்த நிலையில், சென்னையில் ஷீட்டிங் செய்யப்படும் சில வீடுகளும் தண்ணீரால் முழ்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள ஏ.ஆர்.எஸ். கார்டனில் தான் பிரபல சீரியல்கள் ஷூட்டிங் செய்யப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக வீடுகளும், அறைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டில் தான் இலக்கியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாறாக மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக தண்ணீர் கடுமையாக தேங்கியுள்ளது.
இதனால் ஷீட்டிங் தடைப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |