மும்பை அவ்ளோ தான் 7 வருடங்களுக்கு முன்பு.. ரோஹித் ஆர்மி நிகழ்த்திய அதிசயம்.. அற்புதம்!
மும்பை காலி என்று சொன்ன அனைவருக்கும் சரியாக ரிப்ளை கொடுத்திருக்கிறது ரோஹித் ஆர்மி.
அதுவும் சும்மா லேசுப்பட்ட வெற்றியல்ல. நாங்கள் தான் Defending Champions என்று அழுத்தம் திருத்தமாக சொல்லும் வெற்றி அது.
ராஜஸ்தான் ராயல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த போட்டியின் வெற்றியை விட முக்கியமானது, ரன் ரேட் அதிகரித்தது தான் மும்பை சார்பில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதில் சுவாரஸ்யம் என்னவெனில், தொடர் தோல்விகளாக துவண்டு போயிருந்த மும்பை அணி, நிச்சயம் பிளே ஆஃப் வராது என்று பலரும் ஆருடம் கூறியிருந்தனர். ஆனால், நேற்று ராஜஸ்தான் அணியை புரட்டி எடுத்த மும்பை, பிளே ஆஃப் வாய்ப்பை இன்னும் கெட்டியமாக உறுதி செய்துள்ளது.