மணப்பெண்ணாக வந்த முதலை - ஆடம்பர திருமணத்தில் காத்திருந்த ஆச்சரியம்
ஆடம்பர நபர் ஒருவர் முதலையை திருமணம் செய்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மத்திய மெக்சிகோவில் இருக்கும் சான் பெட்ரா ஹவுமெலுலா என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா.
இவர் 7 வயதுடைய முதலையை திருணம் செய்துள்ளார்.
திருமணத்தின் போது முதலைக்குட்டிக்கு வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த முதலைக்கு முத்தம் கொடுத்து இந்தத் திருமணத்தை அவர் செய்துள்ளார்.
இந்தத் திருமணம் முடிந்த பிறகு முதலையை தோளில் சுமந்து மக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்தியாவில் மழைக்காக நடக்கும் சம்பிரதாயம் போல மெக்சிகோவின் பழங்குடி மக்கள் இந்தச் சடங்கை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கடைப்பிடித்துவருவதாக கூறப்படுகிறது.
In an age-old ritual, a Mexican mayor married his alligator bride to secure abundance. Victor Hugo Sosa sealed the nuptials by kissing the alligator's snout https://t.co/jwKquOPg93 pic.twitter.com/Vmqh4GpEJu
— Reuters (@Reuters) July 1, 2022
மூட நம்பிக்கையின் உச்சம்
விக்டர் இத்திருமணம் குறித்து கூறுகையில், "இயற்கையிடம் மழை, உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வேண்டி பிரார்த்தனை செய்து இந்த சடங்கை செய்கிறோம்.
இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றிவரும் நம்பிக்கை" என்றார். நாடு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் புதிய தலைமுறையினர் மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
இருப்பினும் இன்னமும் கூட சிலர் இவைகளை நம்பத் தான் செய்கின்றனர்.
சில மூட நம்பிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும் கூட சில நம்பிக்கைகளில் சமுதாய ஈடுபாடுகள் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.