மெட்டி ஒலி செல்வத்தின் புகைப்படம்! இவரை நினைவிருக்கின்றதா? எதிர்பார்க்காத தற்போதைய நிலை
மெட்டிஒலி
சன் டிவியில் ஒளிபரப்பாகி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக இப்ப வரைக்கும் இருந்து வரும் சீரியல்தான் மெட்டி ஒலி.
இந்த சீரியலில் நடித்து நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.
அதில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஸ்வநாதன் இன்னும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் கொண்டுள்ளார்.
செல்வம் - விஸ்வநாதன்
செல்வமாக நடித்த விஸ்வநாதன் கல்லூரி படிப்பை முடித்து அதற்கு பிறகு சின்ன சிறிய நாடகங்களை நடித்து சீரியலில் நடக்க தொடங்கினார்.
தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட விஸ்வநாதன் சீரியல் மற்றும் நாடகம் மூலம் பிரபலமான தொழிலதிபரின் ஒருவரின் மகளை திருமணம் செய்தார். இவருக்கும் தற்போது 14 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
தற்போது இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறாராம்.
மெட்டி ஒளி சீரியலுக்கு பிறகு பொன்னூஞ்சல் என்ற சீரியலில் மட்டுமே இவர் நடித்திருந்தார்.
ஆனால் சினிமாத்துறைக்கு செல்ல பல முயற்சிகள் எடுத்தாலும் முயற்சிகள் அவருக்கு கை கொடுக்கவில்லை
தற்போதைய நிலை
தற்போது இவர் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக அவரே ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டேன் ஆனால் எனக்கு சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனக்கு இது மிகவும் வருத்தமாக ஏற்படுத்துகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் இவருடைய புகைப்படம் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.