ரயிலில் முகம்சுழிக்க வைத்த காதல் ஜோடியின் செயல்! வைரலாகும் அதிர்ச்சி காட்சி
டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்ஜோடி ஒன்று முத்தமிட்ட காணொளி இணையத்தில் வெளியாகி முகம்சுழிக்க வைத்துள்ளது.
காதல் ஜோடியின் முகம்சுழிக்கும் செயல்
பொதுவாக ரயில் பயணங்களில் சில முகம்சுழிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. இவ்வாறொரு சம்பவம் டெல்லி மெட்ரோ ரயிலிலும் நடந்துள்ளது.
டெல்லியில் மெட்ரோ ரயில் ஒன்றில், தரையில் அமர்ந்து காதல் ஜோடி ஒன்று பயணம் செய்துள்ளனர். குறித்த காட்சியில் இளைஞர் மடியில் இளம்பெண் படுத்திருக்கின்றார். படுத்திருக்கும் அப்பெண்ணை இளைஞரும் முத்தமிட்டுக் கொண்டே இருக்கின்றார்.

இதனை அருகில் இருந்த பயணிகள் அவதானித்துள்ள நிலையில், கடுமையான கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஜோடிகள் மீது மெட்ரோ ரயில் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து வெளியானது.
மெட்ரோ ரயில் நிர்வாகமும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் மெட்ரோவை பயன்படுத்தும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் அநாகரீகமான அல்லது ஆபாச செயலிலும் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என கூறியுள்ளது
थम नहीं रहे #दिल्ली_मेट्रो में अश्लीलता के मामले, अब फिर वायरल हुआ एक कपल का वीडियो.#obscenity #DelhiMetro #Metro #delhi #viralvideo pic.twitter.com/9yFhnW6Qv0
— Virendra Sharma (@VirendraSharmaG) May 10, 2023