ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வழக்கு : மெட்டா ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு!
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாடு சிறார்களின் மனநலனைப் பாதிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ரூ.1.5 லட்சம் கோடி இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் சம்மதித்துள்ளது.
இந்தச் செயலிகளின் அதிகப்படியான பயன்பாடு பதின்ம வயதினரிடையே மன அழுத்தம் மற்றும் தீவிர மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும், பெற்றோர் அனுமதியின்றி சிறார்களின் தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு AI மற்றும் மெஷின் லேர்னிங் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதி
அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மெட்டா வழங்கும் இழப்பீட்டுத் தொகை அமெரிக்க மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ள நிலையில், அதிகபட்ச தொகையை கலிபோர்னியா பெறவுள்ளது.

மேலும், சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தளங்களின் பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் மெட்டா ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி, சிறார்கள் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். பெற்றோர் அனுமதியின்றி நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படவுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |